மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் புதுமையான கண்டுபிடிப்புகளின் முன்னோடி நிறுவனமாக திகழும் ஓசோடெக், தனது புதிய வாகனத்தை பரிசோதனை ஓட்டத்தை நடத்தியது.
ஓசோடெக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பரதன் கூறுகையில்,
“ தரமான மோட்டார், பம்ப் சென்ட் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு பெயர் பெற்ற கோவையில் நாங்கள் உள்ளோம்.
புதுமையான கண்டுபிடிப்புகளுடன் சமுதாயத்திற்கு சேவையாற்றும் தொலைநோக்கோடு, இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சாலைகளுக்கு கன்ட்ரோல் பேனல்,மோட்டார்கள் உற்பத்தி செய்த அனுபவத்தை பெற்றுள்ளோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் பிலியோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தோம். மகிழ்வான 6000 வாடிக்கையாளர்களை பெற்றோம்.
சந்தையில் நாங்கள் செயல்பட்டபோது, பல எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் சேவை செய்ய வசதிகள் இல்லை என்பதை அறிந்தோம்.« பட்டரி, மோட்டார், சேஸிஸ் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்தோம். இந்த தேவையை நிறைவேற்றும் விதமாக இந்தியாவிலேயே அனைத்தையும் உருவாக்கும் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினோம்.
தனி ஒரு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட நிறுவனமாக பீம் உள்ளது,” என்றார். வாடிக்கையாளர்களுக்கு பீம் 7 ஆண்டுகள் வாரண்டியுடன் நிம்மதியை தருவதோடு, வாங்குவதற்கு ஏற்ற நம்பகத்தன்மையையும் தருகிறது.
பீம் வாகனத்தின் விலை, பேம்-2 அமலாக்கத்தின்படி கணக்கீடு செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள், சந்தையில் பிற வாகன விலையை ஒப்பீடு செய்து வாங்கலாம். ஆறு மாடல்களில் உள்ள பீம் வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65,990 முதல் ரூ.1,99,990 வரை இருக்கும்.