fbpx
Homeபிற செய்திகள்கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம்: கே.எம்.சி.ஹெச்- ல் துவக்கம்

கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம்: கே.எம்.சி.ஹெச்- ல் துவக்கம்

கல்லீரல் செயல் இழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இளம் வயதினர், குடும்பத்திற்கு வாழ்வாதார மாக இருப்போர் இதனால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

கல்லீரல் செயல் இழப்புக்கு காரணங்கள் என்று பார்த்தால் எலி விஷம், அதிக அளவிலான மதுப் பழக்கம், நாட்டு மருந்துகள் உட்பட மருந்து மாத்திரைகளை கட்டுப்பாடின்றி எடுத்துக்கொள்ளுதல், ஹெபடைடிஸ் வைரஸ் முதலானவை காரணங்களாக உள்ளன.

கல்லீரல் செயல் இழந்துவிடும் அளவுக்கு தீவிர நிலை நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிளாஸ்மா எக்ஸ்சேஞ், இரத்த சுத் திகரிப்பு, தீவிர சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை நம்பிக்கை அளிக்கும் வகையில் பயன்படுகின்றன.

கேஎம்சிஹெச் மருத்துவமனை இத்தகைய மருத்துவ சிகிச்சைகளை 2019-ம் ஆண்டு முதலே பின்பற்றி ஏராளமான விலைமதிப் பில்லாத உயிர்களை மரணத்தில் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளது.

தற்போது கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக, சிக்கலான நிலையில் இருக்கும் மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் நேற்று (ஏப்.18) துவக்கப்பட்டுள்ளது, இதில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினர் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் உள்ளன.

இதில் உள்ள மருத்துவக் குழுவினர் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் டொமினோ வகை கல்லீரல் மாற்று
அறுவை சிகிச்சைகளில் நிபுணத் துவம் பெற்றவர்கள்.

1000-க்கும் மேற் பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் செய்து உலகளாவிய அனுபவம் பெற்ற மருத்துவக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷங்களால் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்ற விஷமுறிவு அவசர சிகிச்சைக் குழுவும் உள்ளது.

சிகிச்சைகள்

பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர். சுதாகர் துவக்கிவைத்தார். கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி முன்னிலை வகித்து பேசும்போது, இந்த சிகிச்சைப் பிரிவானது தீவிர நிலை கல்லீரல் செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிப்பதில் மேற்கு தமிழகத்திலேயே அதிக அனுபவம் பெற்ற மருத்துவமனை.

அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லாமலேயே பல தீவிரநிலை கல்லீரல் நோயா ளிகளை காப்பாற்றியுள்ள மருத்துவக் குழுவினரின் திறமையை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

மருத்துவ தொழில்நுட்ப வகையில் மிகவும் சவால் நிறைந்த இதுபோன்ற சிகிச்சைகளை உலகத்தரத்திற்கு இணையாக செய்து வெற்றி விகிதத்தை தொடர்ந்து பராமரித்து வரும் மருத்துவக் குழுவினரை அவர் பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img