கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜைக்கா நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், சிவக்குமார், தளபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, சட்டப்பேரவை முதன்மை செயலர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உள்ளனர்.



