கோவை மாவட்டம், 11 வீரபாண் பாண்டி ஊராட்சி, ஆணைகட்டி கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், பழங்குடியின மக்களுக்கு வன அனுபவ உரிமை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சுரேஷ், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நர்மதா துரைசாமி, 11 வீரபாண்டி ஊராட்சி மன்றத்தலைவர் பழனிசாமி ஆகியோர் உள்ளனர்.



