fbpx
Homeபிற செய்திகள்கோவை கண் மருத்துவ மையம், கேபிஆர் கல்லூரி இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்

கோவை கண் மருத்துவ மையம், கேபிஆர் கல்லூரி இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இளஞ் செஞ்சிலுவை மையம், நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் கோவை கண் மருத்துவ மையம் இணைந்து ‘கண் பரிசோதனை முகாம்’ நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் ப.கீதா தலைமை தாங்கி பேசினார்.

கல்லூரி முதன்மை நிர்வாகி முனைவர் செ.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.
கோவை கண் மருத்துவ மைய உதவி மேலாளர் அரவிந்த் மே ற்பார்வையில், மரு.ஹரிஹரன், மரு.யுனஸ், செவிலியர்கள் சுந்தரி, மதுமிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் கண் பரிசோதனைகளைச் செய்தது.

சிறப்பு விருந்தினர்

முதலாம் ஆண்டு நிர்வாக மேலாண்மைத்துறை மாணவன் பிரசாந்த்.ஆர். வரவேற்றார். இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் தரவுப் பகுப்பாய்வுத் துறை மாணவி எஸ்.திவ்யஸ்ரீ சிறப்பு விருந்தினர் அறிமுகவுரை வழங்கினார்.

இளஞ்செஞ்சிலுவை மையம் ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் வெ.அர.தாரணி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிப் பணியளர்கள் என சுமார் 750க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img