fbpx
Homeபிற செய்திகள்நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு மோட்டார் வாகனம் இல்லாத நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, பணியை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் பார்மான் அலி, சவிதா, சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img