கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் தாய்மார்களும் மாநகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோவை வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, லேடீஸ் சர்க்கிள் நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா. திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



