கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத சமுதாயகூடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சமுதாயகூடத்தை புனரமைத்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் உத்தமன், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



