கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் -III, ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப் பணியினை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி செயற்பொறியாளர் இளங்கோவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர் பாட்டன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.