fbpx
Homeபிற செய்திகள்நடைபாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

நடைபாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாநகரப் பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img