fbpx
Homeபிற செய்திகள்காலை உணவுத் திட்டம் தொடங்கி வைப்பு: கோவை மாநகராட்சியில் 46 பள்ளிகளில் பயிலும் 6,026 மாணவ,...

காலை உணவுத் திட்டம் தொடங்கி வைப்பு: கோவை மாநகராட்சியில் 46 பள்ளிகளில் பயிலும் 6,026 மாணவ, மாணவிகள் பயன்

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022ம் தேதி இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 15.07.2024ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.


பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழா நடந்தது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள காந்தி நூற்றாண்டு நடுநிலைப்பள்ளியில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷ னர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்.


பின்னர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். விழாவில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, கல்வி குழுத்தலைவர் மாலதி நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாலமுருகன், மாநகர கல்வி அலுவலர் தாம்சன், கவுன்சிலர் பாக்கியம், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கிழக்கு மண்டலம் ஏஇஇ ராஜேஷ் கண்ணா, உதவி பொறியாளர்கள் ஃபெர்மான் அலி, ராஜராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு, திமுக நிர்வாகிகள், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் வெ. சசிகுமார், நீலிக்கோனாம்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளர் சிங்கை அன்பு, வட்டச் செயலாளர் கே.ஆனந்தகுமார், கொ.ம.தே.க. கோவை மாவட்டச் செயலாளர் தனபால், குமார், ராஜேஷ்குமார், பாலகிருஷ்ணன், கந்தசாமி, கனகராஜ், வெங்கடேஷ், சிவகுமார், கதிரவன், ரவிக்கண்ணன், திருமுருகன், சம்பத், அரவிந்தன், கன்னையன், கௌரிசங்கர், மனோஜ்குமார், கார்த்திக், தங்கவேல், பட்டேல், அகில் அரவிந்த், முத்துவேல், மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த திட்டத்தின் வாயிலாக கோவை மாநகராட்சியில் உள்ள 46 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6,026 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img