கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பில் பல்கலைகழகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கில் தமிழ்நாடு அரசின் புதுமை பெண் திட்டத்திற்கு நன்றி பாராட்டும் விழா இன்று (3-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் துணைவேந்தர் பாரதிஹரிசங்கர் வரவேற்று பேசினார்.
விழாவுக்கு நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். விழாவில் வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்கினார்.
சிறப்புரை
விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவினாசிலிங்கம் ஐயாவின் நினைவு மண்டபம் மற்றும் புகைப்பட காட்சிகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் பதிவாளர் முனைவர் கௌசல்யா திட்ட பயனுரை நிகழ்த்தினர். புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகள் அரசு திட்டத்தை பாராட்டி பேசினார்கள். விழாவில் துணை நிர்வாக அறங்காவலர் கௌரி ராமகிருஷ்ணன் அவினாசிலிங்கம் ஐயாவின் சுயவரலாற்று நூல் வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் முனைவர் வாசுகி ராஜா உள்பட மாணவிகள் திரளான பேர் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:- இந்த கல்வி நிறுவனம்1957ஆம் ஆண்டுதொடங்கப்பட்டு இன்று 8600 மாணவிகள் கல்வி பயின்றுவருவது வரலாற்றில் இடம் பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.
தமிழக முதல்வர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயும் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ 7000 கோடியும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் – 31 அரசு கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் பள்ளி கல்வி துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது ஒரு ஆண்டு வரலாற்றிலேயே அதிகமாகமான ஒதுக்கீடாகும்.
மேலும் கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் ரூ 9 ஆயிரம் கோடி செலவில் வர உள்ளது. புதிதாக கோவை, சென்னை, ஓசூர் ஆகிய இடங்களில் ஐ.டி. பார்க், எழில்மிகு கோவை நகரம் போன்ற திட்டங்கள் இந்தமாவட்ட வளர்ச் சிக்கு செயல்படுதப்பட உள்ளது. மேற்கண்டவாறு அவர் கூறினார். முடிவில் முனைவர் வாசுகி ராஜா நன்றி கூறினார்.



