fbpx
Homeபிற செய்திகள்மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் - 36 மனுக்கள் குவிந்தன

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் – 36 மனுக்கள் குவிந்தன

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம்  நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். 

மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், தார்சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 


கிழக்கு மண்டலத்தில் 5 மனு, மேற்கு மண்டலத்தில் 5 மனு, வடக்கு மண்டலத்தில் 5 மனு, தெற்கு மண்டலத்தில் 2 மனு, மத்திய மண்டலத்தில் 13 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 6 மனு என மொத்தம் 36 மனுக்கள் மேயரிடம் குவிந்தன. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img