fbpx
Homeபிற செய்திகள்நுகர்வோர் அமைப்புகளுடன் காவல்துறை கலந்தாய்வு கூட்டம்- விதிமீறல்களை தடுக்க வலியுறுத்தல்

நுகர்வோர் அமைப்புகளுடன் காவல்துறை கலந்தாய்வு கூட்டம்- விதிமீறல்களை தடுக்க வலியுறுத்தல்

நுகர்வோர்களுடனான காவல்துறை காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. உதவி ஆணையர் அருள்முருகன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட் டது. சாலைகளில் சட்ட மீறல் கள் நடைபெறும் பொழுது ஆன் லைன் ஃபைன் கட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அபராதம் விதிக்கப்படுகிறது.

அதற்குண்டான எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மொபைல் போனில் வருவதில்லை என்றும் அதே போல் அதற்குரிய ரசீதில் முழு விவரங்கள் வழங்கப்படுதல் வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
சிக்னல்கள் முறையாக பராமரிக்கப் பட வேண்டும். அனைத்து சிக் னல்களும் இயங்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகரம் முழுவதும் சாலைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது, நடைபாதைகளில் வாக னங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடையூறுகளை அகற்ற வேண்டும்.

அதேபோல் அனுமதி இல்லாமல் ஆவின், நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட எந்தத் துறையின் அனுமதி இல்லாமலும் ஆவின் டீக்கடைகள் அங்கங்கே வைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு பல்வேறு விதமான சாலை ஆக்கிரமிப்பு, இடையூறுகள் ஏற்படுகிறது. அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

சரக்கு வாகனத்தில் கட்டிடப் பணியாளர்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

ஃப்ரீ லெப்ட் வாகன ஆக்கிரமிப்பு களை கண்டறிந்து அவர்களுக்கு அறி விப்பு செய்து சாலைகளை சுலபமாக கடக்க நடவடிக்கை அவசியம்.

சட்டப்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால் வியாபாரிகள் சிறிய அளவிலான கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தி வருகிறார்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் தொல்லைகளை தவிர்க்க வேண்டும். சாலைகளில் தனியார் பேருந்துகள் நிறுத்துவதை கண்டறிந்து அவர்க ளுக்கு மாற்று இடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

விழிப்புணர்வு

கொடிசியா ரோட்டில் இருசக்கர வாகன ரேஸ்கள் நடத் துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் சைலன்சர்களை மாற்றி ஆல்டர் செய்து கொடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகன பழுது நீக்குபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் நுகர்வோர் அமைப்புகளின் சார்பாக வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் இது குறித்து பரிலீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

முன்னதாக அதிகாரிகள் செய்த நற்பணிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கதிர் மதியோன், ஜெயராம், தமிழ்செல்வன், பிரதீப் குமார், சுரேஷ், வெங்கடேஷ், மாரப்பன், மாரியப்பன், மகபுனிஷா, இந்திராணி, அய்யா சாமி, தேவபாலன், வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img