தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோட அள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீசெலகார அம்மன் ஸ்ரீசெலகாரப்பன் சாமிக்கு திருக்கோவில் மஹாகும்பாபிஷக பெருஞ்சாந்தி விழா ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவானது கணபதி பூஜை, மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மஹா சாந்தி ஹோமம், வேத பாராயணம், மற்றும் இரண்டாம் கால, வேள்வி பூஜையுடன், விசேஷ த்ரவ் யாஹீதி, பஞ்சஸுக்தஹோமம், மூலமந்திர ஹோமம், ஸ்பர் ஷாஹுதி, நாடிசந்தனம், நடைபெற்றது.
இதையடுத்து சாலையிலிருந்து புனித தீர்த்த கலசம் எடுத்துச் சென்று சுவாமி மேல் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் அந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீ செல காரம்மன், ஸ்ரீ செல காரப்பன், சுவாமிகளுக்கு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவை யொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் கவுண்டர் கே எம் பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்த விழா ஏற்பாட்டினை கோவில் தர்ம கர்த்தா துரை என்கிற சின்னதுரை, பங்காளிகள் மற்றும் கெரகோடாஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இந்த திரு விழாவை முன்னிட்டு கெர கோடஅள்ளி ஊர் பொதுமக்கள் நலனுக் காகவும் அவசர தேவைக்காகவும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் வசதியை வழக்கறிஞர் கெ.எம்.சரவணன் வழங்கியுள்ளார்.
இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



