fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வென்ற கிருஷ்ணம்மாள் கல்லூரி அணிக்கு பாராட்டு

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வென்ற கிருஷ்ணம்மாள் கல்லூரி அணிக்கு பாராட்டு

4வது அகில இந்திய ஆல்ட் ஸ்டார் கூடைப்பந்து போட்டி ஜூன் 18 முதல் 22 வரை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் கூடைப்பந்து அணி, இந்த கல்வியாண்டின் முதல் கோப்பையை வெண்கலப் பதக்கம் வென்று பெற்றுள்ளது. உடன் ரூ.5,000 தொகையும் வென்றுள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிர்வாகம் கோப்பையை வென்றவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

தக்‌ஷனா கேப்டன் பி.பி.ஏ, சுபஸ்ரீ பி.எஸ்.சி (சி.எஸ்), மிக் மெர்லின் பி.ஏ ஆங்கிலம், ஸ்ரீ லக்‌ஷ்மி பி.காம், அருந்ததி பி.காம், ரங்கநாயகி பி.ஏ ஆங்கிலம், ஹரி சித்ரா பி.ஏ பொருளியல், ஆனி ப்ளாஸம் பி.ஏ வரலாறு, ஷிரின் சித்தரா பி.ஏ வரலாறு, பாரதி பி.ஏ பொருளியல், ஹர்ஷா பி.காம், அக்‌ஷயா பி.ஏ வரலாறு ஆகியோர் கடின உழைப்பு, ஒற்றுமை மற்றும் சிறப்பான செயல்திறனை நிரூபித்துள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img