கோவையில் மாறுகண் திரைப்பட நாயகன் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறியதாவது:
மாறுகண் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதன் இயக்குனர் லியோ ஜான். என்னுடைய சகோதரி மகனும் நடித் துள்ளார். அடுத்த பட மாக சத்தியதிருமகன், பிச்சைக்காரன் 2, சலீம் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளேன்.
கிரிப்பிங் ஸ்டோரி, யாருமே எதிர்பார்க்காத விஷயமாக இருக்கும். படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கணும்னு விரும்பு வேன். ஆனாலும், என்னை அறியாமல் ஒரு மெசேஜ் வந்து விடும். அதேபோல் இந்த படத்திலேயேயும் முக்கிய கருத்து உள்ளது.
ஆக்டிங், புரொடக்ஷன் வந்த பிறகு மியூசிக் கவனம் குறைந்து விட்டது. இப்போது வீட்டிலேயே தியேட்டர் கட்டி வைத் துள்ளேன், அங்கு மியூசிக் பண்ணிக்கிறேன்.
இந்த படத்தை தொடர்ந்து, லாயர், பிச் சைக்காரன் 2, சலீம் 2 படங்களுக்கும் நானே மியூசிக் பண்ணப் போகிறேன்.
போதைப்பொருள் பழக்கம் இன்றைக்கு நேற்று அல்ல தொடர்ந்து உள்ளது. அரசு எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்கணும்னு சொல்ல முடியாது, இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நடிகர் ஸ்ரீகாந்த் நல்ல நடிகர், காக்கி படத்தில் அவருடன் பழகி நடித்துள் ளேன். கதாநாயகி பிரிஜிதா சகா படத்தை, திரையரங்கில் பார்க்க காத்திருக்கிறேன். கமர் சியலா இருக்கிறத விட கண்டன்ட் இருக்கனும்னு நினைக்கிறேன், அதேபோல் தான் இந்த படத்திலும் உள்ளது, என கூறினார்.



