கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் (எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்) நிறுவனத்தின் கிரிஷா அறக்கட்டளை சார்பில் சமூக பொறுப்பு நிதி மூலம் கல்லூரியில் மாணவிகளுக்காக 33.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பேருரை ஆற்றினார்.
இதில் சிறப்புரையாற்றிய எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் மாணவிகள் மத்தியில் பேசுகையில், அறக் கட்டளையின் மூலமாக செய்து கொண்டிருக்கும் சமூக முன்னேற்ற நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார். மாணவ மாணவியரும் கல்வி கற்று பிற்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.