Homeபிற செய்திகள்குடியரசு தின அணி வகுப்பில் பங்குபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

குடியரசு தின அணி வகுப்பில் பங்குபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

அண்மையில் கோலாகலமாக குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. தேசிய அளவில் டெல்லி யில் நடைபெற்ற அணி வகுப்பில் இக்கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவிகள் ஆர் ஆஷிகா ஸ்ரீ எஸ்.சுபா, மாதவி கே. நிஷோல் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் மாநில அளவில் சென் னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இதே கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவி கேயு பிரியதர்ஷினி பங்கு பெற்றார்.
மொத்தம் நான்கு பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வாழ்த்திய எஸ்என்ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணசாமி சென்ற ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவி ஆர்.அபர்ணா கலந்து கொண்டிருந்தார் தற்போது தேசிய அளவில் மூன்று பேர், மாநில அளவில் ஒருவர் எனத் தொடர்ந்து நம் தேசத்தைப் போற் றிக் கொண்டாடும் நிகழ்வுகளில் எங்கள் கல்லூரி மாணவிகள் பங்கேற்றதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி என்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா மாணவிகளின் பங்கேற்பு கோவை மக்களுக்கு சேர்ப்பதாகும் என்றார். நிர்வாக அறங்காவலர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனை வரும் மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சியளித்த தேசிய மாணவர்படை அலுவ லர் லெப்டினென்ட் ஜெ.சுபாஷினி யையும் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img