fbpx
Homeபிற செய்திகள்கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா கொண்டாட்டம்

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா கொண்டாட்டம்

பெண்கள் கல்வி மற்றும் அதிகாரமளிப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் முதன்மை நிறுவனமான பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கே.சி.டபிள்யூ கல்லூரி தின விழா சிறப்பாக நடை பெற்றது.
கல்லூரி தலைவர் நந்தினி, சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளை விழாவிற்கு வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ஹாரதி 2025-26 ஆம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். 2025-26 ஆம் ஆண்டில் கல் லூரி அடைந்த கல்வி சாதனைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், சமூகப்பணிகள் மற்றும் மாணவிகளின் பல்துறை முன்னேற்றங்களை விளக்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காக்னிசன்ட் மூத்த துணை தலைவர் அர்ச்சனா ரமணகுமார், வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து பேசினார்.


இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரியின் பல துறைகளின் செய்திமடல் வெளியிடப்பட்டன. மேலும் கல்லூரியின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் மேனேஜ்மெண்ட் அவார் ட்ஸ் வழங்கப்பட்டன.
மாணவர் மன்றத் தலைவர் ஐகோ ஜாய்சன் நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img