ஆனைமலை வட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணி களை கலெக்டர் பவன்குமார் க.கிரி யப்ப னவர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கோட்டூர் பேரூராட்சி நெல்லித் துறை மன்னம் பகுதியில் ரூ.5.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 46 பழங்குடியினருக்கான வீடுகளை பார்வையிட்ட கலெக்டர், கட்டு மானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அங்கலக்குறிச்சி ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். ஜல்லிப் பட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வரும் பேக்கரி தயாரிப்பு கூடத்தையும் பார்வையிட்டு, உற்பத்தி மற்றும் விற் பனை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், வட்டாட்சியர்கள் சிவகுமார், முரு கேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உட னிருந்தனர்.



