fbpx
Homeபிற செய்திகள்முதலீட்டுத் தொகை பெற ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

முதலீட்டுத் தொகை பெற ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்ப பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில், முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img