fbpx
Homeபிற செய்திகள்வளர்ந்த மாவட்டமாக கோவையை மாற்றியமைத்தது அதிமுக ஆட்சியில்தான்: எஸ்.பி.வேலுமணி பேச்சு

வளர்ந்த மாவட்டமாக கோவையை மாற்றியமைத்தது அதிமுக ஆட்சியில்தான்: எஸ்.பி.வேலுமணி பேச்சு

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையில் சிறப்பாக வழிநடத்தி மக்களுக்காக அதிகமான உதவிகளை செய்தார். அதை தொடர்ந்து
எடப்பாடியார் தலைமையி லான ஆட்சியில் அதிகமான திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். என்றும் கோவையில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச் சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பெருமிதம்.

கோவையில் கட்டுமானம், அமைப்புசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாநில பொருளாளர் கண்மலை முருகேசன் தலைமையில் கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கட்டுமானம், அமைப்புசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தொழிற்சங்கத்தின் யூடியூப் சமூக வலைதள சேனலை துவக்கிவைத்த தோடு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் கோவை மாநகர மாவட்ட அதிமுக செய லாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ச்சுணன், அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் உட்பட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கட்டுமான அமைப்பு சாரா பிரிவிற்கு அம்மாவின் ஆட்சியில் நான் அமைச்சராக இருக்கும்போது பல்வேறு நலத்திட்டங்களை வழங் கியுள்ளோம்.
குறிப்பாக விபத்து, கல்வி, உட்பட பல்வேறு உதவி திட்டங் கள் செய்துகொடுக்கப்பட் டது. மேலும் நான்கு மாதத் தில் அம்மாவின் வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும், நமது ஆட்சியில்தான், சாலைகள், பாலங்கள், அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கோவை மாவட்டத்தை மாற்றி காட்டியுள்ளோம்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு வீடு,வீடாக சென்று உணவு பொருட்களை கொண்டு சென்று கொடுத்தோம். மேலும் வாரந்தோறும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களை காப்பாற்றினோம். திமுக ஆட்சியில் மக்கள் கொத்து கொத்தாக இறந்தார்கள். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களுக்காக திமுக அரசு எதுவுமே செய்யவில்லை.

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை அம்மா அவர்கள் தலைமையில் சிறப்பாக வழிநடத்தி மக்களுக்காக அதிகமான உதவிகளை செய்தார். அதை தொடர்ந்து எடப்பாடியார் ஆயில், பருப்பு, உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அனைத்து உதவிகளும் அதிமுக ஆட்சியில்தான் அதிகமாக செய்து கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும், அப்போது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி அதிகமான உதவிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img