சிதம்பரம் சி.வக்காரமாரியில் உள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்து மஸ் விழா பள்ளியின் சேர்மன் குமார், இயக்குனர் டாக்டர் முரளி குமார், முதல்வர் ராதிகா, மேலாளர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கலாச்சார குடில், கிறிஸ்துமஸ் மரம் ஒளிரும் இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் பெருமைகளையும், வரலாற்று கலாச்சார நிகழ்வுகளையும் சேர்மன் குமார் எடுத்து ரைத்தார்.சாண்டா க்ளாஸ் வேடமணிந்து மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற் றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



