Homeபிற செய்திகள்கோவை வசந்தவாசல் கவி மன்ற ஆண்டு விழாவில் கவிதை, ஓவியப் போட்டிகள்: நடிகர் தயா பன்னீர்செல்வம்...

கோவை வசந்தவாசல் கவி மன்ற ஆண்டு விழாவில் கவிதை, ஓவியப் போட்டிகள்: நடிகர் தயா பன்னீர்செல்வம் பரிசு வழங்கினார்

கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா வடகோவை மாருதி ஞானசபாவில் நடைபெற்றது. இதையொட்டி கவிதை போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான தயா பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறும் போது, “இந்த நடிகர் என்ற புகழ். “அக்யூஸ்ட்” படத்தில் தனக்கு கிடைத்தது.

கொங்கு மண்டலம் கோவை மாவட்டத்தில் பிறந்து, தொழிலதிபராக வளர்ந்து 2016ல் சினிமா உலகில் தயாரிப்பு பணியில் ஈடுபட ஆரம்பித்ததாகவும், 2022ல் தன்னுடைய ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் ரியா தி ஹண்ட் ஹவுஸ் திரைப்படத்தில் இயக்குனர், நடிகர் பாண்டிய ராஜனை வைத்து, ஒரு பேய் படத்தை முதல் முதலாக நேரடியாக திரையில் தயாரித்து, திரையுலகில் கால் பதித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் நடிகர் உதயா, அஜ்மல், யோகிபாபு கூட்டணியில் இயக்குனர் பிரபு சீனிவாஸ் இயக்கத்தில் “அக்யூஸ்ட்” எனும் மிகப் பெரிய படத்தை மூன்று பேர் தயாரிப்பு கூட்டணியில் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்தது மட்டும் அல்லாமல் அந்தப்படத்தை வெளியிட்டு, தற்சமயம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img