fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 163வது ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 163வது ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கோவையின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.ஃபாவ்லர் தலைமையில் நடைபெற்ற விழா வில் பள்ளியின் முதல்வர் ஜான் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்று பேசினார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா கலந்து கொண்டு மாணவர்களிடையே விடா முயற்சி, தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்க முடியும் என கூறினார்.


நிகழ்ச்சியில் கவுரவ அழைப் பாளராக ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான மருத்துவர் ஜெயகுமார் கலந்து கொண்டு, பள்ளியில் பயின்றபோது தம்முடைய அனுபவங்களை கூறி நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளில் சிறந்து செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது.

பின்னர் ஸ்டேன்ஸ் பள்ளி யின் 2024-25 ஆம் ஆண் டுக்கான சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.


நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ&மாணவிகள், பெற்றோர் கள் என பலர் கலந்து கொண் டனர். விழாவின் ஒரு பகுதியாக நடை பெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

படிக்க வேண்டும்

spot_img