fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் உருவ படத்துக்கு பள்ளியின் தாளாளர் குமார் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மலர் துவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தியின் கனவை நனைவாக்கும் விதமாக தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி, மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img