Homeபிற செய்திகள்புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 31-வது ஆண்டு விழா

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 31-வது ஆண்டு விழா

கோவை, ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலயத்தின் புனித வின்சென்ட் தே பவுல் கிளைச் சபையின் 31-வது ஆண்டு விழா, ஆலயப் பங்கு மறைக்கல்வி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் உபகாரிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. சகோதரி லவ்லின் மேரி ஞான வாசகம் வாசிக்க, வடக்கு வட்டாரச் சபை பொருளாளர் மற்றும் உறுப்பினர் அந்தோணிசாமி வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து, 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை உதவிச் செயலாளர் சகாய ஆரோக்கிய முத்துவும், நிதிநிலை அறிக்கையைப் பொருளாளர் ஆர்.அருள்ராஜும் தாக்கல் செய்தனர்.
விழாவில் ஆர்.எஸ். புரம் பங்குத்தந்தை அருட்பணி. பால்ராஜ் அடிகளார் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. அருள் இருதயராஜ் மற்றும் அருட்சகோதரிகள் பின்டோ, மற்றும் ராணி, வடக்கு வட்டாரச் சபைத் தலைவர் சகோ. அலெக்ஸ் மற்றும் சிறப்பு உபகாரிகள் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, ஏழை பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு, தத்து குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்கப்ட்டது. சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். சபைத் தலைவர் ராஜேஷ் ஏற்புரையாற்றினார்.
முன்னாள் தலைவர் சாமுவேல் ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சகோதரி மோட்சமேரி நன்றி கூறினார்.
இதில் திரளான இறைமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். மேலும் சபையின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் காலை 8 மணி 31வது ஆண்டுவிழா திருப்பலியில் பங்குத்தந்தையின் முன்னிலையில் புனித வின்சென்ட் தே பால் சபையின் உறுதிமொழியை புதுப்பித்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img