fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரகதா.எஸ். (5ம் வகுப்பு) மாநில அளவி லான சதுரங்கப் போட்டி யில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

மகாத்மா யூத் கிளப் மற்றும் அரியலூர் மற்றும் பிளாக் ஸ்குவாட் சதுரங்க அகாடமி நடத்திய சது ரங்கப் போட்டியில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பிரகதா தனது திறமை, தந்திர அறிவு மற்றும் சிறப்பான ஆட்டத் திறமையின் மூலம் முதலிடம் பிடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவி பிரகதாவை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார்,பள்ளி தாளாளர் ஏ.ரூபியால் ராணி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img