fbpx
Homeபிற செய்திகள்அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகம்

அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முயற்சியால் அரசு பழங்குடியினர் பள்ளிகளில் விடுதிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

பழங்குடியரின் வளர்ச்சி தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அமெரிக்காவை சேர்ந்த இந்தியா- சியாட்டில் குழு அமைப்புடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா- சியாட்டில் குழு உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 அரசு பழங்குடியினர் பள்ளிகள் மாணவர்களுக்கு 2 விடுதிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன .

இதற்காக உத்தரவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி பச்சைமலை பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் பா.கீதாவிடம் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக கணினி தகவல் அறிவியல் துறைக்கு நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய- சியாட்டில் குழு இந்திய பிரிவு தலைவர் தேவராஜ் முத்துக்குமாரசாமிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் நன்றி தெரிவித்தார்.

உடன் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், உள்தர கட்டுப்பாட்டு மைய உதவி இயக்குனர் எஸ்.ரமேஷ் குமார்,திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜெயபிரகாஷ், உதவி பேராசிரியர்கள் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் லாவண்யா செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img