fbpx
Homeபிற செய்திகள்யூஐடி கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் அத்தியாயனா பப்ளிக் பள்ளி சாம்பியன்- யுனைடெட் பப்ளிக் பள்ளி 2ம்...

யூஐடி கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் அத்தியாயனா பப்ளிக் பள்ளி சாம்பியன்- யுனைடெட் பப்ளிக் பள்ளி 2ம் இடம்

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான யூஐடி கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் 2024 நடைபெற்றது.

இதில் 18க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1200 மாணவர்கள் பங்கேற்றனர் மாணவர்களுக்கான 30 மீட்டர் ஓட்டம், 50 மீட்டர், 75 மீட்டர் 100 மீட்டர் ஓட்ட போட்டிகளும், நின்ற இடத்தில் இருந்து தாண்டுதல், பந்து எறிதல் ஆகிய விளை யாட்டுக்கள் நடத்தப்பட்டன. அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் ஊக் கப்படுத்தும் நிகழ்வாக இது நடைபெற்றது.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அத்தியாயனா பப்ளிக் பள்ளி அணியும், இரண்டாம் இடத்தை தி யுனைடெட் பப்ளிக் பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை விஜய் வித்யாலயா பள்ளி அணியும் பெற்றிருந்தது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு முனைவர் தமிழ்ச்செல்வி தலைவர் , பாரா பெண்கள் பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

யுனைடெட் நர்சிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரூபி அனிதா, யுனிவர்சல் ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் தலைவர் முனைவர். ஆல்பர்ட் பிரேம்குமார் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி முரளி கிருஷ்ணன் மற்றும் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வந்திருந்த அனைவரையும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img