உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 17-ந்தேதி உலக உயர் ரத்த அழுத்த தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
உயர் ரத்த அழுத்தத்தின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் கடு மையான மருத்துவ பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதும், அதைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பது குறித்த தகவல்களை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும். உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், ஊடகங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை நகர மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியை, சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் எஸ்.என்.நரசிங்கன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனையுடன் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் என்ன என்பது குறித்தும் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த முகாமை இந்திய உயர் ரத்த அழுத்த சங்கத்துடன் இணைந்து உலக உயர் இரத்த அழுத்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்திய உயர் ரத்த அழுத்த சங்க தமிழ்நாடு மாநில பிரிவு தலைவர் டாக்டர் வசந்த்குமார் மற்றும் தலைவர் டாக் டர்.கே.கண்ணன் மற்றும் செயலாளர் டாக்டர்.எஸ்.சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த கலந் துரையாடல் நிகழ்வில் பிரபல மருத்துவர்கள், இருதயநோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் இளைஞர்களி டையே உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் அவர்கள் வரைந்த ஓவியங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
உலக ளாவிய உயர் ரத்த அழுத்த தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக இதில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் உலக உயர் ரத்த அழுத்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.



