fbpx
Homeபிற செய்திகள்நவீன, உயர்தர இணை வசிப்பிடம் ட்ரூலிவ் அறிமுகம் செய்யும் “ஒலிம்பஸ்”

நவீன, உயர்தர இணை வசிப்பிடம் ட்ரூலிவ் அறிமுகம் செய்யும் “ஒலிம்பஸ்”

சென்னையை தலைமையகமாக கொண்டு செயல் படும் ட்ரூலிவ், ட்ரூலிவ் ஒலிம்பஸ் என்ற பெயரில் அதன் ப்ரீமியம் குடியிருப்பு வளாகத் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

சென்னை மாநகரில், போரூரில் 60,000 சதுரஅடி பரப்பளவில் இந்த வளாகம் 356 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. மாநகரின் முக்கிய வர்த்தக அமைவிடங்களான கிண்டி, வடபழனி, பூந்தமல்லி ஆகியவற்றோடு சிறப்பான இணைப்பு வசதியை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரூலிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரஞ்சித் ரத்தோட் பேசுகையில், சென்னையின் மேற்கு பிராந்தியத்தின் மையப் பகுதியில் ஒரு முன்னோடித்துவ முயற்சியாக இணைந்து வாழ்கின்ற நேர்த்தியான அனுபவத்தை எக்ஸிகியூட்டிவ்கள் மற்றும் பணியாளர்களுக்கு போரூரில் அமைந்துள்ள ட்ரூலிவ் ஒலிம்பஸ் வழங்கும்.

நவீன வசதிகளுடனும், மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள வசிப்பிட அம்சங்களுடனும் நவீன இணை வசிப்பிட குடியிருப்பு வளாகமாக இது இருக்கிறது. விரைவில் இப்பகுதியில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையம், நகரின் பல்வேறு இடங்களுக்கும் இணைப்பு வசதியை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும்.

தொழில்முறை பணியாளர்களுக்கு தொழில்துறை சார்ந்த அமைவிடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கான வசதியினை வழங்கும். ட்ரூலிவ் ஒலிம்பஸ், சென்னையில் சௌகரியமான, சமூகத்தை மையமாக கொண்ட, வசிப்பிட வசதியையும் மற்றும் சிரமமற்ற போக்குவரத்து இணைப்பு வசதியையும் கொண்டிருக்கிறது என்றார்.

ட்ரூலிவ் நிறுவனத்தின் இணை – நிறுவனர் ரோஹித் ரெட்டி கூறியதாவது: வசதியோடு வசிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் உகந்தவாறு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு வடிவமைக்கப்படும் ஒலிம்பஸ், நேர்த்தியான, தேவைக்கு பொருந்துகிறவாறு கட்டப்பட்டுள்ள நவீன இணை வசிப்பிட குடியிருப்பு வளாகமாகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img