Homeபிற செய்திகள்பசுமை வளாக இயக்கம் மூலம் சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஐஎஸ்ப் - எக்ஸ்னோராவுடன் 3 ஆயிரம் மரக்கன்றுகள்...

பசுமை வளாக இயக்கம் மூலம் சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஐஎஸ்ப் – எக்ஸ்னோராவுடன் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் மற்றும் பசுமை கிளப் உடன் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து பசுமை வளாக இயக்கத்தை நடத்தின.

இதில் சிமாட்ஸ் என்ஜினிரிங் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யுஜிசி-சிறப்பு தோட்ட இயக்கத்தின் 4-வது கட்டமாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையிலும், பசுமையான சூழலை வளர்க்கும் விதமாகவும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளாகத்தில் நட்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர் கே.வி.கே. ஸ்ரீராம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி, கிரீன் கலாம் நிறுவனர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரையன் தலைமை தாங்கி பேசும்போது, சிறந்த பொறியியல் வல்லுனர்களாக உருவாக்குவதோடு, சமூகத்திற்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து அவர்களுக்கு எடுத்து சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

இந்த திட்டத்திற்காக எங்கள் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மற்றும் எக்ஸ்னோராவுக்கு நன்றி என்றார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் ஆய்வாளர் சரவணன் கூறுகையில், சிமாட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது சமூகத்தின் மீது அவர் களுக்கு உள்ள அக்கறையை காட் டுகிறது என்று குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img