fbpx
Homeபிற செய்திகள்தலையில் பதிந்த 2 அங்குல ஆணியை அகற்றி ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

தலையில் பதிந்த 2 அங்குல ஆணியை அகற்றி ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

தலையின் பின்பகுதியில் பதிந்திருந்த 2 அங்குல ஆணியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 23 வயதான கட்டுமான தொழி லாளருக்கு மிக நுட்பமான, சிக்கல் நிறைந்த மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சையை ரேலா மருத் துவமனை மேற்கொண்டு அவரது உயிரை காப்பாற்றியது.

வடஇந்தியாவைச் சேர்ந்த பிரம்மா என்ற பெயருள்ள தினசரி கூலி பணியாளர், சென்னையிலுள்ள நாவலூரில் தனியார் நிறுவன அமைவிடத்தில் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரது தலையின் பின்பகுதியில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டது.

சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு வலி இருந்த தோடு, அவரது தலையின் பின்பகுதியிலிருந்து ரத்தம் கசிந் தோடுவதை அவர் உணர்ந்தார். ஏன் தலையில் வலியும், கழுத்து வழியாக ரத்தக்கசிவும் ஏன் ஏற்பட்டது என்று இவரால் பார்க்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியவில்லை.

தொழிலக பயன்பாட்டிற்கான துப்பாக்கியிலிருந்து 2 அங்கு நீள முள்ள ஓர் ஆணி எதிர்பாராத விதமாக அவரது தலையின் பின்பகுதியில் வேகமாக நுழைந்து பதிந்திருக்கிறது என்று அங்கிருந்த பிற பணியாளர்கள் தெரிவித்தனர்.

தச்சு வேலைக்காக ஆணியை பதிய வைக்கக்கூடிய துப்பாக்கியை ஒரு சக தொழிலாளி பயன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆணி , அருகிலிருந்த பிரம்மாவின் தலையின் பின்பகுதியில் பாய்ந்திருக்கிறது.

அருகிலுள்ள மருத்துவம னைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், ரேலா மருத்துவமனையில் உடனடி அறுவைசிகிச்சை செய்வதற்காக பரிந்துரைத்து அனுப்பினர்.

ரேலா மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறைக்கு நல்ல உணர்வு நிலையோடு பிரம்மா அழைத்து வரப்பட்டிருந்தார். அவரது கைகள் அல்லது கால்களில் எந்த பலவீனமும் வெளிப்படவில்லை.

அவரது ரத்தஅழுத்தமும், நாடித்துடிப்பும், இயல்பான அளவிலேயே இருந் தன. தலையின் பின்பகுதியில் பதிந்திருந்த ஆணி, அருகில் நகராமல் தடுப்பதற்காக ஒரு கடினமான காலரைப் பயன்படுத்தி அவரது கழுத்து இங்குமங்கும் அசையாதவாறு செய்யப்பட்டது.

ரேலா மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம்.அன்புச்செல்வம் கூறியதாவது: இந்நோயாளிக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே – ஐ பரிசோதித்த பிறகு, மண்டையோடு, கழுத்து மற்றும் முதுகுத்தண்டு சந்திக்கும் பகுதியில் சிடி ஸ்கேன் மற்றும் சிடி ஆஞ்சியோகிராம் பரி சோதனைகளையும் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

சிடி இமேஜிங் சோதனையின் போது, அந்நபரது மண்டையின் பின்பகுதியில் பதிந்திருந்த 2 அங் குல நீள ஆணி, வழக்கமான ஆணி அல்ல என்பதும், மரத் துக்குள் ஆணி அடிக்கப்பட்ட பிறகு எளிதாக அகற்றப்படுவதை தடுப்பதற்காக கூடுதல் இணைப்புகள் மற்றும் தண்டுகளை கொண்ட சிறப்பு ஆணி என்பதும் தெரிய வந்தது.

இடது முள்ளிய தமனிக்கு சற்று மேலே இந்த ஆணி இருப்பதையும் மற்றும் ரத்த நாளத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதம் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பதையும் சிடி ஸ்கேன் படங்கள் காட்டின. மூளை அடிச்சிரைக்கும், நாவடி குழாய்க்கும் மிக நெருக் கமான இடத்தில் இது இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் வழி யாகத்தான் நாக்கிற்கு செல்லும் நரம்பு கடந்து செல்கிறது.

ஆணியை அகற்றாமல், அதே இடத்தில் விட்டு வைப்பது தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதாலும், ஆணி நகர்வது, முக்கிய தமனிக்கும் மற்றும் மூளை கட்டமைப்பிற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், இந்த முழு அறுவைசிகிச்சையையும் மிக துல்லியமாக நாங்கள் திட்டமிட வேண்டியிருந்தது.

இந்த சிக்கலான சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, முகம் குப்புற நோயாளி படுத்திருக்கும் நிலையில், உணர் விழப்பிற்கான மயக்க மருந்து தருவது, இந்நோயாளிக்கு அவசி யமாக இருந்தது. வாயின் வழியாக மூச்சுப் பெருங்குழாயை உட்செலுத்தும் வழக்கமான செயல்முறையை போலல்லாமல், கழுத்தை பின்னோக்கி வளைத்து, ஒரு ஃபைபர் ஆப்டிக் குழலைப் பயன்படுத்தும் அணுகு முறையோடு, ஒரு மாற்று வழிமுறை இந்நோயாளிக்கு பயன்படுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, ஆணி அந்ந பரின் பின்உச்சி எலும்பில் ஊடுருவி உறுதியாக பதிந்திருப்பது கண்டறியப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையோடு, ஆணியைச் சுற்றி மெதுவாக துளையிட சிம்பை நீக்கும் ஒரு வைர உலோக சாதனம் பயன்படுத் தப்பட்டது.

அந்த ஆணியிலிருந்த சிம்புகள் வெளிப்பட்டதை தொடர்ந்து அதைச் சுற்றி மேலும் துளையிடப்பட்டு, ஆணி மிக மெதுவாக அகற்றப்பட்டது. இதன் காரணமாக எந்த ரத் தக்கசிவும் ஏற்படவில்லை மற்றும் போடப்பட்ட துளை வெற்றிகரமாக மூடப்பட்டது என்றார்.

முதுகுத்தண்டிற்கும் மற்றும் பிற நரம்புகளுக்கும் மேற்கொண்டு எதுவும் சேதம் ஏற்படாதவாறு உறுதிசெய்ய நிர்ப்பந்தம் இருந்ததால், உண்மையிலேயே மிகவும் நுட்பமான, அதிக சிக்கல்கள் நிறைந்த அறுவை சிகிச்சை நிகழ்வாக இது இருந் தது. அதுவும் ஒருசில மணி நேரங்களுக்குள்ளாகவே இதனை செய்ய வேண்டிய அவசியமும் இருந்தது.

பல துறைகளைச் சேர்ந்த அனுபவம் மிக்க நிபு ணர்கள் குழு மேற்கொண்ட இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்நோயாளிக்கு உணர்வுநிலை மீண்டும் திரும்பியது. எவ்வித சிரமமுமின்றி அவரது கைக ளையும், கால்களையும் அசைக் கவும், நகர்த்தவும் முடிந்தது.

அறுவைசிகிச்சை நடைபெற்ற நாளுக்கு அடுத்த நாளிலேயே அவரால் நடமாட முடிந்தது. எனவே, 2-வது நாளன்றே நலமுடன் இவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். இப்போது முற்றிலும் குணமடைந்து, இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும் இவர் இப்போது தனது வழக்கமான பணியையும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

‘அறுவைசிகிச்சை முடிந்த இரண்டாவது நாளன்றே நோயாளி அவரது இயல்பு பணிக்கு திரும்புவதை உறுதி செய்திருக்கின்ற மிக நுட்பமான, சிக்கல் நிறைந்த, உயிர்காக்கும் அறுவைசிகிச்சையை, மிக குறைவான நேரத்திற்குள்ளேயே வெற்றிகரமாக செய்திருக்கும் மருத்துவர்கள் குழுவினரை எண்ணி நாங்கள் பெருமைப் படுகிறோம்.

உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுள் ரேலா மருத்துவமனையும் ஒன்று என்பது இத்தகைய சாதனை நிகழ்வுகளின் மூலம் பலமுறை நிரூபணமாகியிருக்கிறது’ என்று ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img