கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் சிறந்து விளங்கும் அ.மா.ஜெயின் கல்லூரி சாக்கா (SACCA) சரக்கு மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) கையெழுத்திட்டது.
இதன் மூலம் தொழில்சார் கல்வியை வளர்ப்பதில் குறிப்பிடத் தக்க முன்னெடுப்பை எடுத்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறையில் குறிப்பிடத்தக்க புது முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.
கல்லூரி புலத்தலைவர் டாக்டர் எம்.எம்.ரம்யா பேசும்போது, இந்தப் புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கேற்ற வகையில் எங்கள் மாணவர்களை நடைமுறை அனுபவத்துடன் கூடிய தகுதி வாய்ந்த தொழில் வல்லுனர்களாக மாற்றுவதையே இலக்காகக் கொண்டு செயல்படுவோம்.
தொழில்பயிற்சி மற்றும் தொழில்சார் திட்டங்கள் வகுப்பறைக் கல்விக்கும் தொழில்சார் கல் விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் இணையில்லா வாய்ப்பாக அமையும்.
மாறிவரும் சுற்றுலாத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தும் என்றார். சாக்கா சரக்கு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் இயக்குநர் எம். வீரபாபு பேசும்போது, சுற்றுலாத் துறையின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் ஆர்வமுள்ள
தொழில் வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் தொழில் துறைக்கேற்ற கல்வியைச் சீரமைப்பதிலும் ஜெயின் கல்லூரியுடன் இணைந்து
செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கல்வியாளர்களுடனும் மற்றும் தொழில்துறையுட னும் நெருக்கமாகப் பணியாற்றுவதால், சுற்றுலாத் துறையில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் திறன்சார் கல்வியை உள்ளடக்கிய ஒரு பாடத்திட்டத்தை
நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இந்தக் கூட்டு ஒத்துழைப்புப் பல இன்றியமையா நோக்கங்களை இலக்காகக் கொண்டுள்ளது.