கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரா ட்டத்தை முன்னெடுத்துச் செல்ல செர்வாவாக் தடுப்பூசி மற்றும் ‘நான் தடுக்க உறுதியளி க்கிறேன்’(IPledgeToPrevent)என்ற முன்முயற்சி தொடங்கப் பட்டுள்ளது.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான மாதத்தை குறிப்பிடுவதன் மூலம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக அங்கீகரிக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), எச்பிவி பற்றிய தவறான எண்ணங்களை அகற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்காக எஸ்ஐஐ ஆனது ‘நான் தடுக்க உறுதியளிக்கிறேன்’ (IPledgeToPrevent) என்ற முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது. இது எச்பிவி பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2022 இல், சீரம் இன்ஸ் டிடியூட் ஆப் இந்தியா-வால் உள்நாட்டி லேயே முதலில் உருவாக்கப்பட்ட செர்வாவாக் எச்பிவி தடுப்பூசியை இந்தியா அங்கீகரித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்ச கம் தனது உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எச்பிவி தடுப்பூசியை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
எச்பிவி தடுப்பூசி, ஸ்கிரீனிங், புற்றுநோய்க்கு முந்தைய சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மேலாண்மை ஆகியவ ற்றுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகங் களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
உலகசுகாதார அமைப்பு போன்ற அரசாங்க அமைப்பு களுக்கு, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயானது முதன்மையாக ஒழிக் கப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு பரந்த அளவிலான மிகவும் பயனுள்ள ஸ்கிரீனிங் முறைகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளன. பல நாடுகளில், எச்பிவி&க்கு எதிரான இத்தகைய முயற்சிகள் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணி க்கையை கணிசமாகக் குறைத்துள்ளன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்காக 2030 ஆம் ஆண்டளவில் நாடுகள் சந்திக்க வேண்டிய தடுப்பூசி, ஸ்கிரீனிங் மற்றும் சிகிச்சைக்கான இலக்குகளை உலக சுகாதார அமைப்பு நிறுவியுள்ளது. கர்ப்பப்பை வாய், புணர்புழை மற்றும் பிறப்புறுப்பில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பது, எச்பிவி தடுப்பூசி இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இந்த இலக்கை நோக்கி முன்னேற உதவும். 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் எச்பிவி தொடர்புடைய புற்றுநோய்களை தடுக்க தடுப்பூசி போட வேண்டும். ஆண் துணைகளும் எச்பிவி-யை தங்கள் பெண் துணைக்கு பரப்பலாம், அது பின்னர் புற்றுநோயாக உருவாகலாம்.



