Homeபிற செய்திகள்என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 68 ஆவது உதய தின விழா

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 68 ஆவது உதய தின விழா

என் எல்சி இந்தியா நிறுவனத்தின் 68வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. என்எல்சி தலைமை அலு வலகத்தில் என்எல்சி இ ந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கொடியை ஏற்றி வைத்து, ஊழியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மனித வளத்துறை இயக்கு நர் சமீர் ஸ்வரூப் வரவேற்றார். நிகழ்ச்சியில் பணி ஓய்வு பெற்ற நிறுவனத்தின் மூத்த ஊழியர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து நிறுவன தலைவர் கவுரவித்தார்.தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து என்எல்சி இந்தியா தலைவர், பெரு நிறுவன அடையாள கையேடு என்ற புத்தகத்தை வெளி யிட்டார். இது, ஊழி யர்கள்,பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என் எல்சிஐஎல்-ன் பிராண்ட் அடையாளம் குறித்த, தெளிவான புரிதலை வழங்குகிறது.

தகவல் தொடர்பு மற்றும் பிரதிநிதித்துவத்தில் நிலை தன்மையை உறுதி செய்வதுடன், வெளி ப்படைத் தன்மை, தொழில்முறை மற்றும் அதன் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டையும் இது வலுப்படுத்துகிறது.

தொடர்ந்து, நெய்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை நடவடிக்கைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். தொடர்ந்து நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, என்எல்சி ஐஎல் நிறுவனத்தை நிறு வியதில் முக்கிய பங்கு வகித்த, நினைவில் வாழும், ஜம்புலிங்க முதலியாரை பாராட்டினார்.

என்எல்சி இயக்குனர்கள் மோகன் ரெட்டி, டாக்டர் சுரேஷ் சந்திர சுமன், டாக்டர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, உயர் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் என்எல்சி பள்ளிகள் மற்றும் சினேகா வாய்ப்பு பள்ளி மாணவ, மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சி நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img