fbpx
Homeபிற செய்திகள்உலக மண் தினம் கொண்டாட்டம்

உலக மண் தினம் கொண்டாட்டம்

10வது உலக மண் தினம் எலயமுத்தூரில் நேற்று கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மகத்துவ மைய மேலாளர் ரகோத்தமன் இந்த வருட சர்வதேச மண் தினம், ‘மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம்’ என்ற தலைப்பில் மண் வளப்பாதுகாப்பையும், மண் ஆதாரங்களையும் முறையாக பேணி பாதுகாத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், மண்ணின் வளத்தை மேம்படுத்துவதர்க்காக மிதமான உழவு, பயிர் சுழற்சி, இயற்கை எருக்களை இடுதல், உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் உபயோகித்தல், ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை முதலானவற்றை விவசாயிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

ரசாயன உரங்கள், வீரியமிகு களைக்கொல்லிகள், பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை தவிர்த்து, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கு மாறும் கேட்டுக்கொண்டார்.

உலக மண் தினம் கொண்டாடப்படும் சூழலில், மண் மற்றும் நீர்வளம் காத்து வாழ்வில் அனைவரும்வளம் பெறுவோம் என அனைவரும் உறுதி ஏற்று கொள்வோம் என்றார். வாரியத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் எடுத்துரைத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பொங்கலூர் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் முனைவர் ரேணுகாதேவி மண் பரிசோதனையின் அவசியத்தையும், மண்மாதிரி எடுக்கும் முறைகளை விளக்கினார். மையத்தின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகர் அரசப்பன், வேளாண் அலுவலர்கள் சந்தியா, சமீரா, மாணிக்கவல்லி, பால் வாசகம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அனைவரும் “நமது பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம்” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உதவி வேளாண் அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.
திருப்பூர் வேளாண் துறையின் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வு ஊர்தி கொண்டுவரப்பட்டு விவசாயிகளின் மண்மாதிரிகள் இலவசமாக பரிசோதனை செய்து தரப்பட்டது. டிரோன் மூலம் விவசாயியின் தோட்டத்தில் மருந்து திரவம் தெளித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது. இதில் 150 பொதுமக்கள், விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த யாத்ரா கூட்டம் ஆலம் பாளையத்திலும் நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img