காரமடை வட்டாரம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் நந்தினி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தினிகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஜடையம்பாளையம் கிராம ஊராட்சி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்றமையா லும் பார்வைக்கு தூய்மையான கிராமமாக விளங்குவதாலும் “முன் மாதிரி கிராமம்” என அறிவிப்பு செய்யப்பட்டது.