கண்களில் தோன்றக்கூடிய பிரச்சனைகளை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் மற்றும் சிகிச்சை பெறவும் வருடாந்திர அடிப்படையில் புற்றுநோய்க்கான கண் பரிசோ தனைகளை செய்வது முக்கியம். குறிப்பாக மரபியல் ரீதியில் இப்பாதிப்புகள் வரக்கூடிய வாய்ப்புள்ள நபர்கள், புறஊதா கதிர்களுக்கு நீண்டகாலம் வெளிப்படக்கூடிய நபர்கள் ஆகியோரைப் பொறுத்தவரை இத்தகைய சோதனைகள் மிகவும் முக்கியமாகும். ரத்தத்திலும், சருமம், நுரையீரல்கள் மற்றும் மார்பகம் போன்ற பிற உடலுறுப்புகளிலும் இருக்கக் கூடிய புற்றுகளை கண் பரி சோதனைகளின் மூலம், அது பரவி உள்ளதா என்று கண் டறிய முடியும்.
உடலின் பிற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள் விரைவாக கண்களுக்குப் பரவக்கூடும் என்பதும் மற்றும் அதிக எண் ணிக்கையிலான ரத்தநாளங் களை கண்களின் பகுதிகள் கொண்டிருப்பதும் இதற்கு காரணம் என்று சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை கண் மருத்துவ நிபுணர் டாக்டர் திவ்யா அசோக் குமார் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின் கண் மருத்துவமனைகளின் மிகப் பெரிய வலையமைப்புகளுள் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், “கண் புற்று நோய்: இடர்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச் சைகள்” என்ற தலைப்பின் கீழ் ஊடகத் துறையினருடன் கலந்து ரையாடல் நடைபெற்றது.
இதில் டாக்டர் திவ்யா பேசியதாவது:
கண் புற்றுநோய் நேர்வு கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடுகை யில், இதன் பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
புகையிலை அல்லது மதுபான நுகர்வு போன்ற பலராலும் பரவலாக அறியப்பட்ட இடர் காரணிகளோடு கண் புற்றுநோய்களுக்கு தொடர் பில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கக்கூடும்.
புற்றுநோய் பற்றி நினைக்கும் போது மக்கள் கண்களைப் பற்றி சிந்திப்பதில்லை. மார்பகம், நுரையீரல், வாய், கருப்பை வாய் அல்லது நாக்கு போன்ற பிற புற்றுநோய்களைப் போல் அல்லாமல், முதன்மையான புற்றுநோய் வகைகளுள் ஒன்றாக கண் புற்றுநோய்கள் இல்லை என்றாலும் கூட, மக்கள்தொகையில் ஒரு பிரிவினருக்கு கணிசமான அச்சுறுத்தலாக கண் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது.
கண் புற்றுநோய் இருந்த குடும்ப வரலாற்றை கொண்டிருக்கும் நபர்கள், கறைவறள்சருமம் மற்றும் புற்றுநோயின் பிற வகைகள் போன்ற சரும நோய்கள் உள்ள நோயாளிகள், ஹெச்ஐவி தொற்று போன்ற உடலெதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆகியோர் கண் புற்றுநோய் ஏற்படுவதற்கான இடர்வாய்ப்புக் குழுவில் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர்.
அதைப்போலவே, அதிக புறஊதாக் கதிர் வெளிச்சம் மற்றும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களுக்கு நீண்ட நேரம் வெளிப்படலுக்கு உட்படுகின்ற நபர்களுக்கு கண் புற்றுநோய் உருவாவதற்கான இடர்வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எந்தவொரு நபருக்கும் கண் புற்றுநோய் உருவாகக்கூடும் என்பதே யதார்த்த நிலை.
இதுபோன்ற இடர்வாய்ப் புள்ள நபர்களது பார்வைத் திறனைப் பாதுகாப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே புற்று நோய் பாதிப்பை கண்டறிவது இன்றியமையாதது என்றார் டாக்டர் திவ்யா.