fbpx
Homeபிற செய்திகள்பொது வேலைநிறுத்தம்: கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை

பொது வேலைநிறுத்தம்: கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழில் சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


அதன்படி மத்திய அரசு வங்கிகள், தொலைதொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக கோவையில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் அந்தத் தொழில் சங்கத்தை சார்ந்தவர்கள் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் போன்றவற்றை இயக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ரயில் மூலமாக கேரளாவுக்கு செல்கின்றனர். அதேபோல வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் கடையடைப்பு நடைபெறவில்லை.


மேலும் வழக்கத்தை விட சற்று குறைவாக பேருந்துகள் மற்றும் ஆட்டோகள் இயக்கபட்டாலும் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.
குறிப்பாக கேரளாவுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை.

படிக்க வேண்டும்

spot_img