fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரம் மாவட்டத்தில் 56,871 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு

விழுப்புரம் மாவட்டத்தில் 56,871 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வளர்ச்சி காண வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் கல்வி பயின்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வித்துறையில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வியினை கண்போல் பாதுகாத்து வருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை அறிந்து வரலாற்று சிறப்பு மிக்க முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபா ட்டினால் பாதிக்கபடாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டமானது, விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி பள்ளிகளில் 15.09.2022 முதல் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக இத்திட்டம் அனைத்து நகரப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள 1,048 அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 50,915 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக, 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில், புனித அன்னாள் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின்காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி முகையூர் ஊராட்சி ஒன்றியம், ஒதியத்தூர் அரசு நிதி உதவி பெறும் ஆர்.சி.துவக்கப்பள்ளியிலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செஞ்சி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்குப்பம் ஆர்.சி. துவக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமை ச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தனர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 158 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 5,956 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 1,206 பள்ளிகளில்செயல்படுத்தப்பட்டு சுமார் 56,871 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்ட த்தின்கீழ் பயனடைந்த ஜோபின் என்ற மாணவரின் பெற்றோர்கள் தெரிவித்தாவது:

எனது பெயர் ஜோசப்ராஜ், என் மனைவி பெயர் விக்டோரியா, என் மகன் ஜோபின் ஒதியத்தூர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறான். எங்களுடைய குடும்பமானது வறுமையான குடும்பம் ஆகும். நானும், எனது மனைவியும் அன்றாடம் விவசாய கூலி வேலைக்கு சென்றால்தான் அன்றாட தினத்தினை ஓட்ட முடியும். விவசாய கூலி வேலை என்பதால் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவோம். இதனால் என் மகன் இரவு செய்த மீதமுள்ள உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு சென்று விடுவான். சில சமயங்களில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு சென்று விடுவான். இதனால் என் மகனின் ஆரோக்கியம் கெடுவதுடன் படிப்பிலும் நாட்டம் குறைந்து காணப்பட்டான். என் மகன் நிலை அறிந்து என்னசெய்வது அறியாமல் இருந்து வந்தேன்.

அப்பொழுதுதான் தமிழ்நாடு முதலமைச்சர், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுதிட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இதனால் என் மகன் கல்விபயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் என் மகன் நாள்தோறும் சூடான ஊட்டச்சத்து மிக்க காலை உணவினை உட்கொள்வான். இதனால் அவனுடைய ஆரோக்கியம் காக்கப்படுவதுடன், நன்கு பாடங்களை கூர்ந்து கவனித்து பாடங்களை நன்கு பயில்வான் என்ற நம்பிக்கை எங்களிடம் எழுந்துள்ளது.

ஏழைப்பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்பத்திட்டத்தினைவழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த அனன்யா என்ற மாணவியின் பெற்றோர் தெரிவித்தாவது:

என் பெயர் மகாலட்சுமி, கணவர் பெயர் சின்னதுரை/ நாங்கள் ஓதியத்தூரில் வசித்து வருகிறோம். என் மகள் அனன்யா ஒதியத்தூர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். என் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நாள்தோறும் வேலை கிடைப்பதும் இல்லை. இதனால் வீட்டில் உள்ளதை கொண்டு சமைத்து சாப்பிடுவோம். இதனால் என் மகளுக்கு காலை உணவு எதிர்பார்த்த அளவிற்கு செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. என்மகளும் எனக்கு இந்த உணவு வேண்டும் இதை செய்து தாருங்கள் என்று கூறுவாள். அப்பொழுது மனதிற்கு சங்கடமாக இருக்கும். முறையான உணவு இல்லாததால் என் மகளும் சரிவர படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இதனை சரிசெய்ய என்னசெய்வது என்றே தெரியாமல் இருந்தோம்.

இச்சமயத்தில்தான், தமிழ்நாடு முதலமைச்சர், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இதனால் என் மகள் கல்வி பயிலும் பள்ளியிலும் இத்திட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்குவதுடன், ஊட்டச்சத்து மிக்க உணவாக வழங்குவதால் என் மகள் நன்றாக உணவு சாப்பிடுவதுடன், தற்பொழுது சுறுசுறுப்பாகவும், படிப்பில் மிகுந்த ஆர்வமும் காட்டி வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்களைப்போன்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் நன்றாக கல்வி பயின்றிட வேண்டும் என்று இதுபோன்ற சிறப்புத்திட்டத்தினைவழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img