fbpx
Homeபிற செய்திகள்இந்தியா தயாரித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!

இந்தியா தயாரித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!

இந்தியாவிற்காக, நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான, எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் ‘டிஎன்டி’ எனப் பரவலாக அறியப்படும் ‘டிரைநைட்ரோடோல்யுவீன்’ வெடிமருந்தைவிட 2.01 மடங்கு அதிக சக்தி கொண்ட வெடிகுண்டுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இதில் அதிக ஆற்றல் கொண்ட செபெக்ஸ் 2, உலகின் மிக சக்தி வாய்ந்த அணுகுண்டு அல்லாத வெடிகுண்டுகளில் ஒன்று. இந்த புதிய வெடிமருந்துக் கலவையை, இந்தியக் கடற்படை விரிவாகச் சோதனை செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஒரு கிலோ ‘டிஎன்டி’யைப் பயன்படுத்தும் இடத்தில் 500 கிராம் வெடிமருந்தைப் பயன்படுத்தினால் போதும், அதே அளவிற்கான தாக்கத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்.

இந்த வெடிகுண்டுகள் மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படைகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள், பீரங்கிக் குண்டுகள், போர் ஏவுகணைகள் அதிக அழிவுத் திறனை பெற உள்ளது. நமது முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது.

செபெக்ஸ் 2 மட்டும் அல்லாமல் செபெக்ஸ் 1, செபெக்ஸ் 4 ஆகிய இரண்டு வெடி மருந்துகளையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. அடுத்த 6 மாதத்தில் மேலும் அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

உலகமெங்கிலும் உள்ள ராணுவங்கள் தங்களுடைய ஆயுதங்களின் திறனை அதிகரிக்க விரும்புவதால், இந்தியா தயாரித்துள்ள அதிக திறன் கொண்ட இந்த வெடி குண்டுகளுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையிலும் பெரும் வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில நாடுகள் இப்போதே தங்கள் ஆர்டரை தருவதற்குத் தயாராகி விட்டன.

தொடர்ந்து எல்லைகளில் வாலாட்டிக் கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தான் மட்டுமின்றி உலக நாடுகளே வியக்கும் அளவிலான இந்த சாதனை இந்தியாவிற்கு பலம் மட்டுமல்ல, பெருமையும் ஆகும்.
எந்த வெளிநாட்டு தொழில்நுட்பத்தையும் பெறால் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்த அதிதிறன் கொண்ட குண்டுகளை தயாரித்துள்ளோம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தியாவை வல்லரசு நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

படிக்க வேண்டும்

spot_img