fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் நூல் வெளியீட்டு விழா- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பங்கேற்பு

சிதம்பரத்தில் நூல் வெளியீட்டு விழா- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பங்கேற்பு

சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் எழுதிய ‘மீண்டும் ஒரு காதல் கடிதம்‘ என்ற நூல் வெளியீட்டு விழா ரயில்வே பீடர்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் புல முதல்வர் அரங்க.பாரி தலைமை வகித்தார்.

மூத்த மருத்துவர் கே.ஆர்.முத்துக்குமரன், வீனஸ் பள்ளிக் குழும நிறுவனர் எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.மதுமிதா வரவேற்றார்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டி யன் எம்.பி. நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நுரையீரல் சிறப்பு மருத்துவர் பால.கலைக் கோவன், நகர பிரமுகர் மூசா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

நூலாசிரியரான நகர் மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை திமுக துணைச் செயலர் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன், திமுக தொழில்நுட்ப பிரிவு செயலர் ஸ்ரீதர், இளைஞர் அணி மக்கள் அருள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img