fbpx
Homeபிற செய்திகள்ஒரே நாடு; ஒரே உரம் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முதலில் ‘பாரத் யூரியா’ விற்பனையை தொடங்கிய...

ஒரே நாடு; ஒரே உரம் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முதலில் ‘பாரத் யூரியா’ விற்பனையை தொடங்கிய ஸ்பிக் நிறுவனம்

பிரதமர்‌ பாரதிய ஜன்‌ உர்வரக்‌ பரியோஜனா’ எனப்படும்‌, ‘ஒரே நாடு; ஒரே உரம்‌‘ என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில்‌ அறிவித்தது. இதன்படி, மானிய விலையில்‌ விற்பனை செய்யப்படும்‌ யூரியா உள்பட அனைத்து உரங்களையும், ‘பாரத்‌‘ என்ற ஒற்றை பெயரில்‌ சந்தைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, யூரியா, பாஸ்பேட்‌ பொட்டாஷ்‌, என்‌.பி.கே., போன்றவற்றின்‌ பெயருக்கு முன்‌, ‘பாரத்‌‘ என்ற பெயர்‌ இனி பொதுவாக இடம்‌ பெற வேண்டும்‌. உரம்‌ தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌ தங்கள்‌ நிறுவனத்தின்‌ பெயர்‌, லோகோ மற்றும் தயாரிப்பு தொடர்பான பிற தகவல்களை, உரப்‌ பைகளில்‌ மூன் றில்‌ ஒரு பங்கு இடத்தில்‌ மட்டுமே அச்சிட வேண்டும்‌.

மீதமுள்ள இடத்தில்‌, பாரத்‌ என்ற பெயர்‌ மற்றும்‌ பிரதமர்‌ பாரதிய ஜன்‌ உர்வரக்‌ பரி யோஜனா திட்டத்தின்‌ லோகோ இடம்‌ பெற வேண்டும்‌ என்பன போன்ற விதிமுறைகளை விதித்து, அவற்றை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பிக் நிறுவனம்

இந்நிலையில், பிரதமர் மோடியின் ‘ஒரே நாடு ஒரே உரம்‘ திட்டத்தின் கீழ், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் ‘பாரத் யூரியா’ தயாரிக்கப்பட்டு, நேற்று (வியாழக்கிழமை) விநியோகத்திற்காக லாரிகள் மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாரத் யூரியா முதற்கட்ட விநியோகத்தை ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே உரம்‘ என்ற கொள்கையின் அடிப்படையில் பாரத் யூரியாவை, இந்தியாவில் முதன்முதலாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் அறிமுகப்படுத்தி, விற்பனையை தொடங்கியுள்ளது.

1969ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பிக் நிறுவனம், விவசாயத்தை பெருக்குவதற்கு தேவையான அறிவியல் பூர்வமான தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரிவதால், ஸ்பிக் நிறுவனம் விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

வெறும் விற்பனையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், விவசாயிகளுக்கு அவ்வப்போது தேவையான ஆலோச னைகளை வழங்கியும், அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியும் வருகிறது.

பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறது. இதனை உயர்த்தி, ஆண்டிற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய திட்டமிடப் பப்பட்டு உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை (தரக்கட்டுப்பாடு). துணை இயக்குநர் கண்ணன், முதன்மை செயல் அதிகாரி பாலு, பொது மேலாளர் (பணிகள்) செந்தில் நாயகம், துணை பொது மேலாளர் (விநியோகம்) அடைக்கலம், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு மேலாளர் அம்ரிதகவுரி, உதவி அலுவலர் குணசேகரன் உள்பட ஸ்பிக் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img