fbpx
Homeபிற செய்திகள்ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி, விற்பனை கோவையில் இன்று முதல் 3 நாள் நடக்கிறது

ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி, விற்பனை கோவையில் இன்று முதல் 3 நாள் நடக்கிறது

தென் இந்தியாவின் கவர்ச்சிகரமான தனித்துவமிக்க “ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2022” நகை கண்காட்சி மற்றும் விற்பனையின் 45-வது கோவை பதிப்பு, ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் இன்று (டிச.2) முதல் 4-ம் தேதி வரை நடக்கிறது.

காலை 10.30 முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும்.
கண்காட்சியை இன்று பார்க் குழுமத்தின் தலைமை செயல்அதிகாரி டாக்டர் அனுஷா ரவி துவக்கி வைத்தார்.

‘ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி’

கண்காட்சியில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகள் இடம் பெறுகின்றன.
சமீபத்திய நுண் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், ஆன்டிக், அரிய வகை கற்களைக் கொண்ட நகைகள், குந்தன், ஜடாவு, போல்கி மற்றும் வெள்ளி நகைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ‘ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி’ கோவை நகரில் தரமிக்க சிறப்பான கண்காட்சி.

கண்காட்சியை பார்வையிட்டு, வரும் திருமண விழாவிற்கோ, விழாக்காலங்களுக்கோ முன்பதிவு செய்து வாங்கலாம். ஒரே இடத்தில் துல்லியமான வடிவமைப்பு, அரிய வகை கற்கள் கொண்ட சிறப்பான நகைகளை வாங்க இது ஒரு வாய்ப்பு. தென் இந்திய அளவில் உலகத்தரம் வாய்ந்த நகைகளை வாங்க நேர்த்தியான கண்காட்சி.

பெங்களுரு, மும்பை, டில்லி, சென்னை, சூரத், கோவை, ஜெய்ப்பூர் இடங்களிலிருந்து நகைகள் கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. சர்வதேச நகை வடிவமைப்புகள், பெயர் பெற்ற நகைகள், நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

நகை வடிவமைப்பில் சிறந்த நிறுவனங்களாக திகழும் கஜ்ரால் ஜூவல்லர்ஸ் (பெங்களூரு), ஜெஜெ டயமன்ட்ஸ் (சென்னை), கர்ப்பகம் ஜூவல்லர்ஸ் (கோயம்புத்தூர்) ஷெகல் ஜூவல்லர்ஸ் (டில்லி), நேகா கிரியேஷன்ஸ் (மும்பை), ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ் (மும்பை), எல்மாஸ் (சூரத்), ஆரா (டில்லி), ஷெரின்ஸ் ஜூவல்ஸ் (டில்லி), ஜிவா ஜூவல்லரி (மும்பை), மோடி கோல்டு (டில்லி), கோல்டுஸ்மித் (மும்பை), தியானி, கரன் ஜோகர் (மும்பை), ப்யுர் டிரேஸஸ் (சூரத்), எப்இசட் ஜெம்ஸ் (ஜெய்ப்பூர்) மற்றும் பல பங்கேற்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img