fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் ‘தொழில்நுட்ப சுற்றுலா’

அவினாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் ‘தொழில்நுட்ப சுற்றுலா’

கோவை விழாவைக் கொண்டாடும் விதமாக கடந்த 5, 6-ம் தேதிகளில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள 7 பொறியியல் துறைகள் இணைந்து, தொழில்நுட்ப சுற்றுலா என்ற திறந்த வீடு நிகழ்வினை நடத்தியது.

திட்டப்பணிகள்

வளர்ந்து வரும் பொறியியல் மாணவியர் தங்கள் தொழில்நுட்ப திறன்களையும் திறமைகளையும் வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வு அமைந்தது. அவர்கள் தங்கள் புதுமையான திட்டப்பணிகளை காட்சிப்படுத்தினர்.

சிலர் உயர்தர உபகரணங்களின் செயல்பாட்டைக் காட்டினர். சிலர் குறிப்பிட்ட பொறியியல் செயல்முறைகளில் பயிற்சி அளித்தனர். சுவாரஸ்மான அறிவியல் விளையாட்டுகளும் இருந்தன.

திறந்த வீடு நிகழ்வின் நோக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உள் கதையை எளிமையாகவும் கவர்ச் சிகமானதாகவும் அனைவருக்கும் குறிப்பாக பள்ளி செல்வோர் புரிந்து கொள்ளும் வகையில் காட்டுவதாகும்.

பார்ப்பது நம்பிக்கைக்குரியது. எனவே ஒருவரின் புத்தக அறிவை உயிர்ப்பிக்க எக்ஸ்போ ஒரு சிறந்த தளமாகும். ஓர் இன்ஜினியரிங் இன்ஸ்டிட்யூட்டுக்கான திறந்த இல்லத்தின்போது பார்வையாளர்கள் ஒவ்வொரு பொறியியல் துறையும் என்ன, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.

இத்தகைய வெளிப்பாடு பள்ளிக் குழந்தைகளில் மேலோக்கி இருக்கும் சில ஒரே மாதிரியான வகை சிந்தனைகளை உடைத்து அவர்கள் பரந்த அளவில் ஆராய உதவும்.

படிக்க வேண்டும்

spot_img