கோவை பேரூர் பகுதி யில் உள்ள அருந்ததியர் சமூக கூடத்தில் பேரூர் அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 255வது பிறந்தநாள் விழா, தையல் கலை பயிற்சி மாணவிகளுக்கு பரிசளிப்பு, சீருடைகள் வழங்குதல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்கமாக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் இயக்குனர் ரவிவர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவீரன் பொல்லான் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு, பேரூர் அருந்ததியர் சமூகப் பொது நல அறக்கட்டளை தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.
பொருளாளர் பழனிச்சாமி, அறங்காவலர் திருமலைச்சாமி, துணை தலைவர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் கணேசன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுகுமாரன், ஆதிதிராவிடர் நலக்குழு திமுக மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, ஆறுதல் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆகியோர் தையல் கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், அருந்ததியர் சமூக அறக்கட்டளை முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, ஒய் ஜி எஸ் மாநில தலைவர் பெருமாள், கௌரவ ஆலோசகர்கள் பொன்னுசாமி, நடராஜன், அருந்ததியர் சமூக அறக்கட்டளை முன்னாள் தலைவர் சுந்தர், அருந்ததியர் சமூக அறக்கட்டளை மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் மருதாச்சலம், மக்கள் நல பணியாளர் பரமசிவம் கலிக்கநாயக்கன்பாளையம் பத்திரன், சமூக அறக்கட்டளை துணைச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் அருந்ததியர் சமூக அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்



