காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 138 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இளைஞர் அணி மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கர்னல் ஜான் பென்னிகுக் சிலை அமைந்துள்ள லோயர் கேம்பில் இருந்து தேனி மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி பென்னி குயிக் சிலையிலிருந்து தொடங்கி கம்பம்பாளையம் தேனி வழியாக பெரியகுளம் சென்று பின்பு வடுகபட்டி வழியாக ஆண்டிபட்டி சென்று தேனியில் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வை தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேனி மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.